ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த வாலிபர் கைது


ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 5:53 PM GMT (Updated: 9 Jun 2021 5:53 PM GMT)

தியாகதுருகம் அருகே ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்தவர் கண்ணாயிரம் மகன் அய்யப்பன் (வயது 35). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் பிரிதிவிமங்கலத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அய்யப்பனை கத்தியால் குத்தியதோடு, அவரிடம் இருந்து  ரூபாய் ஆயிரம்  மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். கத்திக்குத்தில் காயமடைந்த அய்யப்பன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதனிடம் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். 

வாகன சோதனை

அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தியாகதுருகம்  சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியதாஸ், முருகன், மனோகர் மற்றும் போலீசார் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
 இந்த தனிப்படை போலீசார் நேற்று மாடூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்,  சென்னை பாடி புது நகரை சேர்ந்த முருகன் மகன் தேவன்பிரகாஷ் என்கிற  சாம்பார் பிரகாஷ் (26) என்பது தெரிந்தது.

வலைவீச்சு

 மேலும் இவர் தனது  நண்பரான எலி என்கிற கோகுல்  என்பவருடன் சேர்ந்து அய்யப்பனை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேவன் பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து  மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள கோகுலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story