மாவட்ட செய்திகள்

வாலிபர் தற்கொலை + "||" + Suicide

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை
வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் மாவட்டம் முல்லை நகரை சேர்ந்தவர் உதயபிரகாஷ் (27). இவரது மனைவி ரோகிணி (23). இந்த தம்பதிக்கு திருமணமாகி இனியன்  என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நாமக்கல் நல்லிபாளையத்தில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தனர். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த 2 மாதத்திற்கு முன் நாமக்கல் நல்லிபாளையத்திலிருந்து, கரூர் மாவட்டம் முல்லை நகருக்கு குடும்பத்துடன் வந்து வசித்து வருகின்றனர். 
இந்நிலையில் உதயபிரகாஷ் கரூரில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். 
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக உதயபிரகாஷ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்பட்டதால் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கடந்த 20 நாட்களுக்கு முன்பும் மீண்டும் கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ரோகிணி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த உதயபிரகாஷ் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது மனைவியின் செல்போனுக்கு தகவல் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அறிந்த உதயபிரகாஷின் உறவினர்களான ராஜா, சந்தோஷ் ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது உதயபிரகாஷ் தூக்கில் தொங்கினார். 
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தற்கொலை குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்தவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
சேத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தற்கொலை
தற்கொலை
5. திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை