மாயனூர் கதவணையில் பராமரிப்பு பணி தீவிரம்


மாயனூர் கதவணையில் பராமரிப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:54 PM IST (Updated: 9 Jun 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி மாயனூர் கதவணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம்
தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நாளைமறுநாள் (சனிக்கிழமை) தண்ணீரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மாயனூர் கதவணைக்கு வந்து அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும். 
பின்னர் மாயனூர் காவிரியில் இருந்து பிரியும் தண்ணீர் கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் ஆகிய மூன்று முக்கிய வாய்க்கால்களிலும் கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
சீரமைக்கும் பணி தீவிரம்
இதனால் மாயனூர் கதவணையை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கதவணையின் மேற்பகுதியில் சில்வர் பெயிண்டு அடிக்கபட்டுள்ளது. மேலும் 98 மதகுகளும் கிரீஸ் அடிக்கப்பட்டுள்ளது. 
குறுவை சாகுபடிக்கு வரும் தண்ணீரை வரவேற்கும் வகையில் மாயனூர் கதவணை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story