நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா


நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Jun 2021 6:42 PM GMT (Updated: 9 Jun 2021 6:42 PM GMT)

கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்' வைக்கப்பட்டது.

கோவை

கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்' வைக்கப்பட்டது. 

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் கோவையில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

கோவையில் கொரோனா பாதிப்பு 22 சதவீதம் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே வீதியில் 50 பேர்

இந்த நிலையில் நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மேற்கு புதூர் பகுதியை சேர்ந்த 658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில் ஒரே வீதியை சேர்ந்த 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

 இதையடுத்து அதிகாரிகள் அந்தப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்ததுடன், பிளிச்சீங் பவுடர் தூவினார்கள். அத்துடன் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. 

தீவிர கண்காணிப்பு 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கொரோனா காரணமாக அடைக்கப்பட்ட மேற்கு புதூர் பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர். 

நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 


Next Story