சூலூர் அருகே விதியை மீறி செயல்பட்ட தனியார் நூற்பாலைக்கு சீல்
சூலூர் அருகே விதியை மீறி செயல்பட்ட தனியார் நூற்பாலைக்கு சீல்
கருமத்தம்பட்டி
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி நடுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை வைத்து இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோவை தொழிலாளர் நலத்துறை அதிகாரி தங்கதுரை, சூலூர் தாசில்தார் சகுந்தலாமணி, வருவாய் ஆய்வாளர் சிவபாலன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படுவதற்கு பதிலாக ஏராளமான தொழிலாளர்களை வைத்து இயக்கப்பட்டது தெரியவந்தது. எனவே கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட தால் அந்த நூற்பாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, தனியார் தொழிற்சாலைகளில் அரசு அறிவித்து உள்ள விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறையை மீறி செயல்பாட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story