கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:25 AM IST (Updated: 10 Jun 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை

கோவையில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ள சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் பலர் கொரோனாவால் இறந்துள்ளனர். 

எனவே அவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்க சுகாதாரப் பணியாளர்கள் கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என்.புதூர் மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

பாதுகாப்பு உபகரணங்கள் 

இதற்கு ஏ.ஐ.டி.சி.யு. மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றும் முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். 

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லும்போது தினமும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்வதுடன், மருத்துவ கழிவுகளை அகற்ற கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றனர். 

கோரிக்கை மனு 

பின்னர் தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகனை சந்தித்து கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். 


Next Story