மாவட்ட செய்திகள்

6 வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் டாக்டர் சாவு + "||" + Female doctor dies after falling from 6th floor

6 வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் டாக்டர் சாவு

6 வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் டாக்டர் சாவு
கோவையில் துணிகளை காயப்போட்டபோது வலிப்பு ஏற்பட்டதால் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
கோவை

கோவையில் துணிகளை காயப்போட்டபோது வலிப்பு ஏற்பட்டதால் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

பெண் டாக்டர்

கோவை உப்பிலிபாளையம் ஸ்ரீவாரி மனோசரோவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் ராம்குமார். இவருடைய மனைவி வத்சலாதேவி (வயது 56). 

இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணி புரிந்து வந்தார். பின்னர் அவர் கடந்த 2017-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். 

வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தவறி விழுந்தார் 

இந்த நிலையில்  வீட்டில் துணிகளை துவைத்த வத்சலாதேவி, அவற்றை காய போடுவதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மொட்டை மாடிக்கு சென்றார். 

பின்னர் அவர் 6-வது மாடியில் உள்ள அங்கு துணிகளை காயப்போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வலிப்பு வந்துள்ளது. 

அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால், 6-வது மாடியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். 

பரிதாப சாவு 

இதில் தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட தால், ரத்த வெள்ளத்தில் கிடந்த வத்சலாதேவி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் வத்சலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.