கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் மது கடத்திய 3 பேர் கைது
கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் மது கடத்திய 3 பேர் கைது
கோவை
கோவை குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.
அந்த காருக்குள் 3 பேர் இருந்தனர். அதில் அவர்கள் கோவைப்புதூரை சேர்ந்த ஜான்சன் (வயது 30), தனசேகர் (26), விஷால் (26) என்பதும், கர்நாடக மாநிலத்தில் இ்ருந்து மது கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதுபோன்று பீளமேடு, சரவணம்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த அய்யப்பன் (51), கிருஷ்ணன் (37), நாகராஜ் (64), கிரிகுமார் (34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 60 மதுபாட்டில்கள், ரூ.19,800 பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story