தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் இருந்து காய்கறி மூட்டைக்குள் மறைத்து வைத்து தமிழ்நாட்டுக்கு கடத்திய 509 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்
பெங்களூரு சிட்டி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையிலான போலீசார் மார்க்கெட் சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
அப்போது அந்த வழியாக காய்கறி மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அந்த ஆட்டோவின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளை அகற்றி பார்த்த போது மதுபான பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் அருணாபேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 24), அதே மாவட்டம் தவசிராகுளத்தை சேர்ந்த ராஜ்குமார் (27) என்று தெரியவந்தது.
509 லிட்டர் மதுபானம்
இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் இருந்து தினமும் திருவண்ணாமலைக்கு சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக பெங்களூருவில் இருந்து மதுபானத்தை வாங்கி சென்று, தமிழ்நாட்டில் விற்பனை செய்வதற்காக, அவற்றை சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேரிடமும் இருந்து 59 பெட்டிகளில் இருந்த 509 லிட்டர் மதுபானம் மற்றும் ஒரு சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
கைதான ராமகிருஷ்ணன், ராஜ்குமார் மீது சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story