மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு + "||" + Chain flush to the girl

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
ராதாபுரம் அருகே பெண்ணிடம், மர்மநபர் சங்கிலியை பறித்துச் சென்றார்.
ராதாபுரம், ஜூன்:
ராதாபுரம் அருகே அழகனாபுரத்தை சேர்ந்தவர் வனராஜ் மனைவி சுமித்ரா சுதா (வயது 35). வனராஜ் இறந்துவிட்டதால் சுமித்ரா சுதா தனது இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து தூங்கினார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சுமித்ரா சுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை நைசாக பறித்துச் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியையிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபர்
காரைக்குடியில் ஆசிரியையிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியை கண்காணிப்பு கேமரா காட்சி உதவியால் போலீசார் கைது செய்தனர்.
2. மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
3. வீட்டின் அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் 7½ பவுன் சங்கிலி பறிப்பு
இரூரில் பட்டப்பகலில் வீட்டின் அருகே நடந்து சென்ற ஆசிரியையிடம் 7½ பவுன் சங்கிலிைய ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
4. பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
5. குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
பெரம்பலூரில் குப்பை கொட்டச்சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.