ஆவண எழுத்தர், முத்திரைத்தாள் விற்பனை அலுவலகங்கள் திறக்க அனுமதி வேண்டும்
விருதுநகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் நிலையில் ஆவண எழுத்தர், முத்திரைத்தாள் விற்பனையாளர் மற்றும் ஆவணம் தட்டச்சு செய்யும் அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் நிலையில் ஆவண எழுத்தர், முத்திரைத்தாள் விற்பனையாளர் மற்றும் ஆவணம் தட்டச்சு செய்யும் அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகம்
இதுகுறித்து பத்திர எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் அறிவிப்பின்படி கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு உத்தரவினால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாத காரணத்தினால் ஆவண எழுத்தர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தொடர்புடைய இதர ஊழியர்கள் முடங்கினர். தற்போது தமிழக அரசு உத்தரவின்படி கடந்த 7-ந் தேதி முதல் பத்திரப்பதிவு அலுவலகம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பத்திரப்பதிவிற்கு வரும் பட்சத்தில் ஆவண எழுத்தர்கள், ஆவணம் தட்டச்சு செய்பவர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் விதிமுறைக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் அலுவலகத்திலிருந்து பணி செய்து கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மூட உத்தரவு
விருதுநகர் நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலக பணியாளர்கள் செயல்பட்டு வரும் எங்களது அலுவலகங்களை மூட உத்தரவிடுவதுடன் அபராதம் விதித்து கடையை சீல் வைத்து விடுவோம் என்றும் கூறும் நிலை உள்ளதால் நாங்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளோம்.
பேரிடர் காலத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டும் நோக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக அத்தியாவசிய தேவைக்காக சொத்துக்களை விற்க வருபவர்களை அலைக்கழிக்கும் நிலையில் செயல்படும் நிலை உள்ளது.
கோரிக்கை
எனவே ஆவண எழுத்தர் மற்றும் முத்திரைத்தாள் விற்பனை நிலையங்கள் மற்றும் தட்டச்சு செய்யும் அலுவலகங்கள் அரசு விதிமுறைகளின்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அனுமதி வழங்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story