தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை


தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2021 1:02 AM IST (Updated: 10 Jun 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

சேத்தூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தளவாய்புரம், 
சேத்தூர் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மேல தெருவை சேர்ந்தவர் கனிராஜன். கூலி தொழிலாளி. இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு மாலதி (வயது 21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக  இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா விசாரணைக்கு அனுப்பி உள்ளனர்.

Next Story