மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் கைது


மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய  ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 1:05 AM IST (Updated: 10 Jun 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில், திருமண ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மண்டியா:

மண்டியாவில், திருமண ஆசை வார்த்தைகள் கூறி மைனர் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். 

மைனர் பெண்

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணா. இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். தற்போது சொந்தமாக ஆட்டோ ஒன்றை வைத்து ஓட்டி வந்தார். 

இந்த நிலையில் இவருக்கும், இவரது வீட்டின் எதிர் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 16 வயது நிரம்பிய ஒரு மைனர் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மைனர் பெண்ணுடன் லட்சுமணா நெருங்கி பழகினார். 

இதனால் அவருடன் அந்த மைனர் பெண்ணும் நெருங்கி பழகினார். இதையடுத்து அந்த பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி அவரை லட்சுமணா கற்பழித்தார். பின்னர் அடிக்கடி அவரிடம் லட்சுமணா உல்லாசம் அனுபவித்துள்ளார். 

கர்ப்பம்

இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி லட்சுமணாவிடம் கூறி வற்புறுத்தி உள்ளார். 

ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இந்த நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதுபற்றி அவர்கள் மைனர் பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மைனர் பெண்ணிடம் விசாரித்தனர். 

அப்போது அந்த மைனர் பெண், தன்னை ஆட்டோ டிரைவர் லட்சுமணா காதலிப்பதாக கூறி உல்லாசம் அனுபவித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறினார். 

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் பெற்றோர் இதுபற்றி கே.ஆர்.பேட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லட்சுமணாவை கைது செய்தனர். 

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story