மாவட்ட செய்திகள்

மீன் ஏற்றிச் செல்லும் பெட்டிகள் திருட்டு; 2 பேர் கைது + "||" + Theft of fish carts; 2 people arrested

மீன் ஏற்றிச் செல்லும் பெட்டிகள் திருட்டு; 2 பேர் கைது

மீன் ஏற்றிச் செல்லும் பெட்டிகள் திருட்டு; 2 பேர் கைது
கூடங்குளத்தில் மீன் ஏற்றிச் செல்லும் பெட்டிகளை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம், ஜூன்:
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் ரமேஷ் (வயது 27). இவர் கன்னியாகுமரி அருகே உள்ள முட்டம் கிராமத்தில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். அவர் மீன்களை ஏற்றிச் செல்வதற்காக தனது வீட்டின் அருகில் சாலை ஓரமாக உள்ள இடத்தில் மீன் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போனது. இதுதொடர்பாக அவர் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பினு குமார் ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை ேசர்ந்த மனோகரன் மகன் மார்த்தாண்ட பூபதி (25), நல்லமுத்து மகன் கருப்பசாமி (22) ஆகிய இருவரும் மீன் பெட்டிகளை திருடியது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மது விற்ற 2 பேர் கைது
கடையநல்லூரில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சப்-இன்ஸ்பெக்டரின் ேமாட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
உசிலம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சோளிங்கர் அருகே; அரசு பள்ளிகளில் ரூ.2¼ லட்சம் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
சோளிங்கர் அருகே 3 அரசு பள்ளிகளில் மடிக்கணிகள், பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. அரக்கோணம்; ஜாமீனில் வந்தவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
அரக்கோணத்தில் ஜாமீனில் வந்தவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது