கணவர் மீது போலீசில் பெண் புகார்


கணவர் மீது போலீசில் பெண் புகார்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:19 AM IST (Updated: 10 Jun 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நண்பருடன் செக்ஸ் வைக்கும்படி கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது போலீசில் பெண் புகார்

பெங்களூரு:

பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஷெரீப். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. திருமணத்திற்கு பின்பு கோவாவுக்கு தனது மனைவியை ஷெரீப் அழைத்து சென்றிருந்தார். 

அங்கு வைத்து மதுஅருந்தும்படி கூறி தனது மனைவியை ஷெரீப் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய கணவர் ஷெரீப் மீது சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில், அவரது மனைவி ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், தன்னை மதுஅருந்தும்படி கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அவரது நண்பருடன் செக்ஸ் வைத்து கொள்ளும்படி தன்னை அடித்து, உதைத்து தாக்கி கொடுமைப்படுத்துகிறார். மேலும் தான் கர்ப்பமாக இருந்த போது கணவர் தாக்கியதால், வயிற்றில் இருந்த கரு கலைந்து விட்டதாகவும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story