மாவட்ட செய்திகள்

நெல்லை கண்டியப்பேரியில் ஆஸ்பத்திரி கட்டும் பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு + "||" + Collector Vishnu inspects the construction work of a hospital at Nellai Kandy

நெல்லை கண்டியப்பேரியில் ஆஸ்பத்திரி கட்டும் பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு

நெல்லை கண்டியப்பேரியில் ஆஸ்பத்திரி கட்டும் பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு
நெல்லை கண்டியப்பேரியில் ஆஸ்பத்திரி கட்டும் பணியை, கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.
நெல்லை, ஜூன்:
நெல்லை கண்டியபேரியில் ஆஸ்பத்திரி கட்டும் பணியை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நெல்லை கண்டியபேரியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை ரூ.28 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமான பணியை நேற்று கலெக்டர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் உள்ள நெல்லை கண்டியபேரியில் இரண்டாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை ஜப்பான் நிதி உதவியுடன் ரூ.28 கோடியே 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. 5329.54 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. 3 தளங்களுடன் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்படுகிறது. இங்கு அவசரகால தாய் சேய் பிரிவு, பொது மருத்துவ பிரிவு (பெண்கள்), பொது மருத்துவ பிரிவு (ஆண்கள்) கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், பொதுப்பணித்துறை (மருத்துவப்பணிகள்) செயற்பொறியாளர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் அருள் நிதிசெல்வன், தாசில்தார் பகவதிபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.