அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 1:40 AM IST (Updated: 10 Jun 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பாவூர்சத்திரம், ஜூன்:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தென்காசி ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, எதிர்கட்சித்தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிப்பது, தென்காசி தொகுதியில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட மனோஜ்பாண்டியன் ஆகியோருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் இருளப்பன், அமல்ராஜ், பாண்டியன், அருவேல்ராஜ், முருகேசன், சுப்பிரமணியன், ஜெயக்குமார், நகர செயலாளர் சுடலை, பேரூர் செயலாளர்கள் கணேஷ் தாமோதரன், கார்த்திக்குமார், மயில்வேலன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story