சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையம்; சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சிவகிரியில் நெல் கொள்முதல் நிலையத்தை, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
சிவகிரி, ஜூன்:
சிவகிரி வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என டாக்டர் சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ.விடம் சிவகிரி வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சிவகிரியில் கோடை கால நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் தவமுனி, துணை இயக்குனர் நல்லமுத்து ராஜ், உதவி இயக்குனர் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story