கிணற்றில் விழுந்த மயில் மீட்பு


கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 1:49 AM IST (Updated: 10 Jun 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மயிலை, வனத்துறையினர் மீட்டனர்.

அச்சன்புதூர், ஜூன்:
கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மயில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அப்பகுதி விவசாயிகள், கடையநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர். கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கால்நடை உதவி மருத்துவர் சிகிச்சைக்கு பின்னர் மயில், காட்டுக்குள் விடப்பட்டது.

Next Story