சேலம் அருகே உடையாப்பட்டியில் அடுத்தடுத்து 10 வீடுகளில் டி.வி.க்கள் பழுது உயர்மின் அழுத்தத்தால் பாதிப்பு


சேலம் அருகே உடையாப்பட்டியில் அடுத்தடுத்து 10 வீடுகளில் டி.வி.க்கள் பழுது உயர்மின் அழுத்தத்தால் பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 8:45 PM GMT (Updated: 9 Jun 2021 8:45 PM GMT)

சேலம் அருகே உடையாப்பட்டியில் உயர் மின் அழுத்தத்தால் அடுத்தடுத்து 10 வீடுகளில் திடீரென டி.வி.க்கள் பழுதானது.

சேலம்:
சேலம் அருகே உடையாப்பட்டியில் உயர் மின் அழுத்தத்தால் அடுத்தடுத்து 10 வீடுகளில் திடீரென டி.வி.க்கள் பழுதானது.
டி.வி.க்களில் புகை
சேலம் அருகே உடையாப்பட்டி ஊராட்சியில் ஆசிரியர் காலனி உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். 
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் நேற்று வீடுகளில்  இருந்தனர். காலை 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். 
அப்போது, அவரது வீட்டில் இருந்த டி.வி. திடீரென வெடித்து புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் டி.வி. வெடித்து தீப்பிடித்து விட்டது என நினைத்து உடனடியாக வீட்டுக்கான மின் இணைப்பை துண்டித்தார்.
மேலும் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவரது வீட்டின் அருகே அடுத்தடுத்து உள்ள வீடுகளில் இருந்த டி.வி.க்களும் பழுதாகி இருந்தது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் என்ன ஆனது என்பது குறித்து பேசிக்கொண்டனர். ஒரே நேரத்தில் 10 வீடுகளில் இருந்த டி.வி.க்களில் புகை வெளியேறி பழுதானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
உயர் மின் அழுத்தம்
இது குறித்து உடையாப்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘உயர் மின் அழுத்தம் காரணமாக டி.வி.க்கள் பழுதாகி இருக்கலாம்’ என்று தெரிவித்தனர். 

Next Story