சூளகிரியில் கொரோனா அச்சத்தால் பள்ளி மாணவி தற்கொலை


சூளகிரியில் கொரோனா அச்சத்தால் பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2021 2:16 AM IST (Updated: 10 Jun 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரியில் கொரோனா அச்சத்தால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சூளகிரி:
பள்ளி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மில்லத் நகரை சேர்ந்்தவர் மாதேஷ். இவரது மகள் ஜீவிதா (வயது 16). இவர் சூளகிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இதனால் அவதியடைந்த அவர் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் காய்ச்சல், தொண்டை வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.
கொரோனா அச்சம்
இதனிடையே மாணவி தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்று அச்சமடைந்தார். இதனால் அவர் மன உளைச்சலும், பயமும் அடைந்தார். இந்தநிலையில் நேற்று மாணவி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரியில் கொரோனா அச்சம் காரணமாக 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story