மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு + "||" + water release

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர் மற்றும் கர்நாடக மாநில பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 470 கனஅடியும், நேற்று வினாடிக்கு 348 கனஅடியும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உயர்ந்தது. 
தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் பாரூர் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். பாரூர் ஏரியில் தண்ணீர் நிரம்பிய பிறகு, கிருஷ்ணகிரி அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். 
இந்தநிலையில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று பாரூர் ஏரிக்கு சிறு மதகின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 348 கனஅடி தண்ணீர் பாரூர் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. பாரூர் ஏரி நிரம்பிய பின்னர் அணையின் கால்வாய் பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.