பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரிக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,133 மதுபாட்டில்கள் பறிமுதல் 4 பேர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்


பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரிக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2,133 மதுபாட்டில்கள் பறிமுதல் 4 பேர் கைது; 2 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:10 PM GMT (Updated: 9 Jun 2021 9:10 PM GMT)

பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 133 மதுபாட்டில்களை சேலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருப்பூர்:
பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கார், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 133 மதுபாட்டில்களை சேலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 
கர்நாடகாவில் இருந்து கடத்தல்
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு மதுபாட்டில்கள், மது பாக்கெட்டுகள் அதிகளவில் கடத்தப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இதை தடுக்கும் வகையில், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சுங்கச்சாவடியில் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியமூர்த்தி, பழனிசாமி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 குறிப்பாக நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 1,399 மதுபாட்டில்கள் அட்டை பெட்டிகளில் கொண்டு வரப்பட்டதை கண்டுபிடித்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 
மேலும் சரக்கு வேனில் வந்தவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி தாலுகா, நாகாச்சி நம் பையன் வலசை பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் மணீஸ்வரன் (வயது 26), நாகாச்சி ஆக்கிடா வலசை பகுதியைச் சார்ந்த வேலு மகன் சுப்ரதீபன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
கார் பறிமுதல்
இதேபோல் அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கடத்தி வரப்பட்ட 734 மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த, நாகர்கோவில் திருப்பதி நகரை சேர்ந்த ரமேஷ் (46), கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி தாலுகா குமரேசன் தெருவை சேர்ந்த முத்துவேல் பிள்ளை (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் காரில் அவர்களுடன் வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், ஆகாஷ் ஆகிய 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் நேற்று ஒரேநாளில் பெங்களூருவில் இருந்து ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 133 மது பாட்டில்களை பறிமுதல் செய்து கருப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story