பெரம்பலூரில் கொரோனாவுக்கு 15 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 15 பேர் பலியாகினர்
பெரம்பலூர்
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 62 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 42 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 20 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 9 பேர் என 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவிற்கு நேற்று 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,012 பேர் தனிமைப் படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 435 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Related Tags :
Next Story