ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் கஞ்சா-மதுபாட்டில்கள் கடத்தல்; 4 பேர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் கஞ்சா-மதுபாட்டில்கள் கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னை நோக்கிச்சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். போலீசார் சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களிடம் ஒரு பையில் மொத்தம் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் இருந்து சென்னை செங்குன்றத்திற்கு கஞ்சா கடத்த முயன்றதாக செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 24) மற்றும் பிரகாஷ் (26) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுபாட்டில்கள் பிடிபட்டது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தமிழக-ஆந்திர எல்லைப்பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததனர்.
அப்போது ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு சொகுசு காரில் கடத்த முயன்ற 116 மதுபாட்டில்கள் சிக்கியது. அதே போல மற்றொரு சொகுசு காரில் கடத்த முயன்ற 216 மதுபாட்டில்கள் சிக்கியது. மொத்தம் 332 மதுபாட்டில்களையும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சென்னை மாதவரத்தை சேர்ந்த சதிஷ் (30) மற்றும் அடையாறை சதீஷ்குமார் (36) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், பொன்னேரி அருகே அத்திப்பேடு கிராமத்தின் வழியாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் 42 மதுபாட்டில்கள் கடத்தி வந்த ஆவடியை சேர்ந்த டவுபிக்ரகுமான் (29), ராஜன்பாபு (387) ஆகியோரை சோழவரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் கைது செய்தார்.

Related Tags :
Next Story