பாகலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்; 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு


பாகலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்; 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2021 10:27 AM IST (Updated: 10 Jun 2021 10:27 AM IST)
t-max-icont-min-icon

பாகலூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள பாகலூர் முகலப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமப்பா (வயது 49). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர் தனக்கு நிலம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபரை லட்சுமப்பா, முகலப்பள்ளியில் உள்ள எல்லம்மா கோவில் அருகே வருமாறு அழைத்தார். எல்லம்மா கோவில் அருகே லட்சுமப்பா வந்தபோது அங்கிருந்த 2 வாலிபர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தாக்குதலில் காயமடைந்த லட்சுமப்பா பாகலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமப்பாவை தாக்கிய 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story