மாவட்ட செய்திகள்

வறண்டுபோன வெறையூர் ஏரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் + "||" + Risk of drinking water shortage in the arid Varaiyur Lake

வறண்டுபோன வெறையூர் ஏரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

வறண்டுபோன வெறையூர் ஏரி குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
வெறையூர் ஏரி வறண்டு போய் விட்டது. இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாணாபுரம்

வெறையூர் ஏரி வறண்டு போய் விட்டது. இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெறையூர் ஏரி

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர் கிராமம். அங்கு 80 ஹெக்டர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில், மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும். இதன் மூலம் கோடைக்காலத்தில் சுற்று வட்ட பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அது மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இப்பகுதியில் குறைந்த அளவே மழை பெய்தது. இதனால் ஏரிக்கு ஓரளவுக்கு மட்டும்தான் தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீரும் தற்போது வடிந்து விட்டது. இதனால் ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கூறுகையில், மழை அதிகளவில் பெய்தால் மட்டுமே இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். மேலும் ஏரிக்கு வரும் கிளை கால்வாய்கள் அனைத்தும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் தடைபட்டு விட்டது. மேலும் சிறு சிறு ஓடைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளிவரக்கூடிய தண்ணீர் செல்ல வழியில்லாததால் அப்பகுதி முழுவதும் தூர்ந்து காணப்படுகிறது.  இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவது கிடையாது. 

ஏரியில் குடிமராமத்துப் பணி

இது ஒருபுறமிருக்க சாத்தனூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இடதுபுற கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் சுற்றுவட்டாரப் பகுதியில் அனைத்துக் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் இங்குள்ள வெறையூர் ஏரிக்கு தண்ணீர் வருவது இல்லை. 

ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குடிமராமத்துப் பணியின்கீழ் ஏரியில் செடி, கொடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. கரைகளும் பலப்படுத்தப்பட்டது. எனினும், ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. 

ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை
எனவே சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி தற்போது வறண்டு காணப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எதிர் வரும் காலங்களில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு தூர்ந்து கிடக்கும் கால்வாய்கள் மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய்களை மீட்டு ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
------------------