ஆரணி பகுதியில், மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உறுதி


ஆரணி பகுதியில், மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2021 4:39 PM IST (Updated: 10 Jun 2021 4:39 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி கூறினார்.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பவன்குமார் ரெட்டி நேற்று மாலை ஆரணிக்கு வந்தார். அரசு உத்தரவுப்படி ஊரடங்கு உள்ளதால் மாலை 5 மணி அளவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

ஆரணி நகர எல்லை அனைத்துப் பகுதியிலும் வாகனத்தில் அதிரடி போலீசாருடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து ஆரணி -ஆற்காடு சாலையில் அப்பந்தாங்கல் கூட் ரோடு அருகே திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் ஆரணி பயணியர் விடுதிக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கூட்ரோடு பகுதியில் ஒரு சோதனை சாவடிக்கான கட்டடம் அமைத்து அங்கு நிரந்தரமாக ஒரு காவலர் நியமிக்கப்படுவார்.

ஆற்றுப் படுகைப் பகுதியில் இருந்து கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேட்கிறீர்கள். இன்னும் 10 நாட்களில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன்.

சாராய ஊறலை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது சாராயம் விற்்பவர்கள் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ் பாண்டியன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story