திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 313 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 313 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 5:06 PM IST (Updated: 10 Jun 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 313 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 313 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இவர்களில் போளூரை அடுத்த ரெ.குண்ணத்தூர் கிராமத்தில் 48 வயதான ஆண்ஒருவரும் அடங்குவார்.

போளூர் பேரூராட்சியில் 7 பேருக்கும், சுற்றி உள்ள கிராமங்களில் 5 பேருக்கும் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 ஆயிரத்து 119 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். 6 ஆயிரத்து 382 பேர் தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளனர். 488 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

Next Story