மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 2 பேர் கைது


மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
x

கும்பகோணத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கும்பகோணம்,

கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை காவிரி ஆற்றில் ஒரு கும்பல் மாட்டு வண்டிகளில் மணல் திருடி செல்வதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் 5 போலீசார் வலையப்பேட்டைக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். .

அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த 10 பேர் கும்பல் போலீசாரை சூழ்ந்து கொண்டு அவர்களை தாக்கினர். இதில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் இரும்பு பைப்பால் தாக்கப்பட்டார். இதனால் செல்வகுமாரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வலையப்பேட்டையை சேர்ந்த செல்வம், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Next Story