பெண் தொழிலாளி சாவு


பெண் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 10 Jun 2021 7:34 PM IST (Updated: 10 Jun 2021 7:34 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் கட்டுமான பணியின்போது பெண் தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து பலியாகினார்.

தேனி: 

தேனி அல்லிநகரம் வெங்கலாநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவருடைய மனைவி மல்லிகா (50). இவர்கள் இவரும் கூலித்தொழிலாளர்கள். 

நேற்று முன்தினம் மல்லிகா, தேனி துவரங்குளம் சாலையில் ஒரு வீடு கட்டுமான வேலைக்கு சென்றார். 

வீட்டின் முதல் மாடியில் சுத்தம் செய்து கொண்டு இருந்தபோது, அவர் தவறி கீழே விழுந்தார். 

இதில் அவருடைய கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அவருடைய கணவர் பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Next Story