எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:52 PM IST (Updated: 10 Jun 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டம் கம்பம், கூடலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி: 

தேனி பழைய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். நகர பொருளாளர் சைபுதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 அதேபோல், கூடலூரில் நடந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். அப்போது மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்தனர். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபீர், நகர செயலாளர் காதர், பொருளாளர் சபரிதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், தேவதானப்பட்டி ஆகிய இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story