அரசு ஆஸ்பத்திரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்


அரசு ஆஸ்பத்திரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:16 PM IST (Updated: 10 Jun 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி சீர்கேட்டை கண்டித்து ஆஸ்பத்திரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் திருட்டு, மருந்துகள் திருட்டு உள்ளிட்டவைகளை கவனித்து நடவடிக்கை எடுக்க தவறியதை கண்டித்து நடைபெற்ற  ஆர்ப்பாட் டத்திற்கு பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முகமது யாசின், ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், வீரகுல தமிழர்படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன், வைகை பாசன விவசாய சங்க பொதுச்செயலாளர் மதுரை வீரன் மற்றும் அம்பேத்கர், பெரியார் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனீஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சபீர், பெரியார் பேரவை பொதுச் செயலாளர் இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story