மாவட்ட செய்திகள்

கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + aarpattam

கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராமத்தினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை வழங்கக்கோரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ளது நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட பெருங்களுர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ளது வயலூர் கிராமம். இந்த ஊரில் 150 வீடுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் வானம் பார்த்த விவசாயமாக நெல், மிளகாய் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கடும் மழை காரணமாக விவசாயம் அனைத்தும் அழிந்து போனதால் வாழ்வாதாரம் இன்றி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து  சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நாகராஜன் தலைமையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் வயலூர் கிராம பகுதியில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். இதற்கான நிர்வாக நிதி ஒதுக்கீடு அனுமதியை பெற்று வழங்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.