திருச்சி- ராமேசுவரம் இடையே அதிவேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு சோதனை
திருச்சி-ராமேசுவரம் இடையே 3 பெட்டிகளுடன் அதிவேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு தண்டவாளங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது.
ராமேசுவரம்,
திருச்சி-ராமேசுவரம் இடையே 3 பெட்டிகளுடன் அதிவேகத்தில் ெரயில் இயக்கப்பட்டு தண்டவாளங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது.
முன்னெச்சரிக்கை
கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெரும்பாலான ெரயில்கள் இயக்கப் படவில்லை. மிகவும் குறைந்த அளவிலான ெரயில்களும் சிறப்பு ெரயில்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் ராமேசுவரம் பகுதிக்கும் குறைந்த அளவிலான ெரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி மற்றும் ராமேசுவரம் இடையே நேற்று 3 பெட்டிகளுடன் ெரயில் இயக்கப்பட்டு தண்டவாளங்களில் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதற்காக நேற்று காலை 8 மணி அளவில் திருச்சியில் இருந்து 3 பெட்டிகளுடன் ெரயில் புறப்பட்டு புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக பாம்பன் ெரயில் பாலத்தை கடந்து பகல் 11.30 மணி அளவில் ராமேசுவரம் வந்தடைந்தது.
ஆய்வு
பாம்பன் ெரயில் பாலத்தில் மட்டும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ெரயில் மற்ற பாதைகளில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு தண்டவாளங்களின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டது.
பாம்பன் ெரயில் பாலம் மற்றும் தூக்குப்பாலம் வழியாகவும் 10 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி இந்த ெரயில் ஆய்வு செய்து பார்த்ததில் ெரயில் பாலத்தில் எந்த ஒரு அதிர்வும் இல்லை என்பதும் ெரயில் பாலம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
Related Tags :
Next Story