கழுகுமலையில் வீட்டில் ரூ.4லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது


கழுகுமலையில் வீட்டில் ரூ.4லட்சம் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 9:18 PM IST (Updated: 10 Jun 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் வீட்டில் ரூ.4 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

கழுகுமலை:
 கழுகுமலை அண்ணா புது தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் அங்கு சென்ற போலீசார் வீட்டை திறந்து சோதனையிட்டனர். அங்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மகன் சுரேஷ் கண்ணன் (வயது 35) என்பவரை  கைது செய்தனர். 

Next Story