மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது + "||" + 2 arrested for selling tobacco in thoothukudi

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்ற 2பேர் கைது
தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்,
தூத்துக்குடி:
 தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் உள்ள எஸ். எஸ் பிள்ளை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராஜ் (39) மற்றும் சுடலைக்கண் மகன் செல்வகுமார் (49) ஆகியோர் அவர்களுடைய குளிர்பான கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.எனவே தனிப்படையினர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அந்தக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7ஆயிரத்து 574 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.