த்தான்குளம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
சாத்தான்குளம் அருகே விவசாயி அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய தம்பி உள்பட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
விவசாயி
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தைச் சேர்ந்தவர் யாக்கோபு தர்மராஜ் மகன் ஜோசப் செல்வன் (வயது 43). விவசாயியான இவர் தந்தையிடம் பூர்வீக சொத்தில் விவசாயம் செய்ய அதனை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அவரும் தருவதாக உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தம்பி ஏனோஸ் பெஞ்சமின் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.
அரிவாள் வெட்டு
இந்நிலையில் கடந்த 4-ஆம்தேதி ஜோசப் செல்வன், தோட்டத்து அறையில் இருந்தபோது அங்கு வந்த ஏனோஸ் பெஞ்சமின், அவரது அக்கா மகன் மதன், தங்கை ஜாஸ்மின் ஜூலிபாய், தந்தை ஆகியோர் அவதூறாக பேசி தோட்டத்தை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த ஏனோஸ்பெஞ்சமின் அரிவாளால் வெட்டினாராம். மற்ற 3பேரும் அவரை தாக்கினராம். பின்னர் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று விட்டனராம். காயமடைந்த ஜோசப் செல்வன் சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து ஜோசப் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் ஏனோஸ்பெஞ்சமின் உள்பட 4 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story