நீலகிரி மாவட்டம் டோபிகாலனா பகுதி தனிமைப்படுத்தப்பட்டது


நீலகிரி மாவட்டம் டோபிகாலனா பகுதி தனிமைப்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 10 Jun 2021 10:18 PM IST (Updated: 10 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டம் டோபிகாலனா பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தபட்டு வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட டோபிகாலனா பகுதியில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் அந்த பகுதியை சுகாதாரத்துறையினரும், நகராட்சியினரும் தனிமைப்படுத்தி உள்ளனர். அங்கிருந்து பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநபர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில் டோபிகாலனா பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் சத்தியமூர்த்தி நகர், எஸ்.ஆர். நகர், ஹவுசிங் யூனிட், ஆரஞ்சு குரோம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வந்தனர். தற்போது அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், அந்த ரேஷன் கடையை வண்ணாரபேட்டை சமுதாய கூடத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Next Story