ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 14 பேர் பலி


ஒரே நாளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு  14 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 10:25 PM IST (Updated: 10 Jun 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை

14 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு அறிவிப்பின்படி ஒரே நாளில் 30 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 
பின்னர் தொடர்ந்து நாளொன்றுக்கு சராசரியாக 5 பேர் மட்டுமே உயிரிழந்தது போன்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அரசு அறிவிப்பின்படி நேற்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 304 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

6,216 பேருக்கு சிகிச்சை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 45 ஆயிரத்து 301 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 
இதில், 38 ஆயிரத்து 583 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 6 ஆயிரத்து 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 502 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story