மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் + "||" + STBI Parties Innovative Demonstration

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
வந்தவாசி

வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஏஜாஸ்அகமது தலைமை தாங்கினார். கொரோனா தொற்று காலத்தில் வர்த்தகம் இல்லை. வேலையில்லை. விலைவாசி மட்டும் உயர்ந்து கொண்டு செல்கிறது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற ேவண்டும். கலால் வரி என்ற பெயரில் வரியை வசூலிக்கக் கூடாது. ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டை பகுதியில் இருந்து பாடைக்கட்டி அதில் கியாஸ் சிலிண்டரை வைத்து கயிறுக்கட்டி ஆட்டோ மூலம் சாலையில் பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக இழுத்து வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஷபீர்பாஷா, நஜீர்ஹுசன், சலீம், அப்துல் ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.