பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் சைக்கிளை பாடையில் வைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் சைக்கிளை பாடையில் வைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ிண்டுக்கல்:
திண்டுக்கல் பேகம்பூர் சிக்னல் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து பாடையில் வைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் முகமது லத்தீப் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டே செல்வது கண்டிக்கத்தக்கது. அதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பழனி பட்டத்து விநாயகர் கோவில் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர தலைவர் சாதிக் அலி தலைமை தாங்கினார். இதேபோல் ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, செம்பட்டி, வேடசந்தூர், சாணார்பட்டி ஆகிய பகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story