குன்னூர் நகரில் மின்சாரம் தாக்கி குரங்கு சாவு
குன்னூர் நகரில் மின்சாரம் தாக்கி குரங்கு உயிரிழந்தது.
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு வாழ்ந்து வரும் குரங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் குன்னூர் நகரில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று வண்டிபேட்டை பகுதி வழியாக செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளில் ஏறி குரங்குகள் விளைாயடின. அப்போது அதில் ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது.
கீழே விழுந்த அந்த குரங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் சிறிது நேரத்தில் குரங்கு உயிரிழந்தது. இதனால் குரங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story