கரூரில், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்


கரூரில், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2021 11:00 PM IST (Updated: 10 Jun 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

கரூரில், சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்.எம்.எஸ்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட உதவி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் இருந்து தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும், வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story