சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 கடைகளுக்கு அபராதம்
சமூக இடைவெளியை கடைபிடிக்காத 14 கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நீலகிரியில் பொது இடங்களில் முககவசம் அணியாத 87 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.17 ஆயிரத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 14 கடைகளுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.7,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story