கரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
கரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவடிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கரூர்
பொறுப்பேற்பு
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இதுவரை பணிபுரிந்த சசாங்சாய் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பூர் நகர துணை ஆணையராக பணியாற்றிய சுந்தரவடிவேல் கரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று தாந்தோணிமலையில் உள்ள கரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார்.
வரவேற்பு
முன்னதாக புதிய போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலுக்கு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர். அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story