கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 13 பேர் பலி


கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 13 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 11:08 PM IST (Updated: 10 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரேநாளில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். புதிதாக 172 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர் 
172 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. தற்போது கொரோனாவின் தொற்றின் தாக்கம் சற்று குறைய தொடங்கி உள்ளது. 
இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
13 பேர் பலி 
இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 199 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 13 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி 2,513 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story