எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள வடகாடு, புல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு. (வயது 62).விவசாயி. இவர் தனது மருமகளின் 4 பவுன் தாலி, மாடு வாங்குவதற்காக ரொக்க பணம் ரூ.50 ஆயிரத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து பீரோ சாவியை எடுத்து 4 பவுன் தாலி, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.