மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 10 பேர் பலி + "||" + corona

கொரோனாவுக்கு 10 பேர் பலி

கொரோனாவுக்கு 10 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 10 பேர் பலியான நிலையில் நேற்று ஒரே நாளில் 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர், 67 வயது முதியவர், 38 வயது ஆண், 74 வயது முதியவர், 69 வயது முதியவர், 67 வயது மூதாட்டி, 50 வயது ஆண் ஆகிய 7 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.
அதே போல கொரோனா பாதிப்புடன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 60 வயது பெண், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 53 வயது ஆண், திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்தது.
298 பேர் பாதிப்பு
தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 672 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 10 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர். அதில் 33 ஆயிரத்து 526 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 560 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 256 ஆக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
மதுரையில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். 160 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 293 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு 10 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர்.
3. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ெகாரோனாவுக்கு 10 பேர் பலியானார்கள்.
4. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி மேலும் 613 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 10 பேர் பலியாகினர்