லாரி கவிழ்ந்து 9 பேர் படுகாயம்
பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாலக்கோடு அருகே
லாரி கவிழ்ந்து 9 பேர் படுகாயம்
பாலக்கோடு, ஜீன்.11-
பாலக்கோடு அருகே லாரி கவிழ்ந்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 25). இவர் மகேந்திரமங்கலம் அருகே கண்டகபைல் மலை கிராமத்தில் தனியார் ஜூஸ் நிறுவனத்துக்காக மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அந்த லாரியில் மாங்காய் பாரத்தின் மேல் ஜக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமர்ந்து இருந்தனர்.
லாரி வஜ்ஜரபள்ளம் திருப்பத்தில் வந்த போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
9 பேர் காயம்
இந்த விபத்தில் டிரைவர் உட்பட லாரியில் வந்த ஜக்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த சின்னகன்னு (45), முருகம்மாள் (32) சின்ன பொன்னு (42), முருகன் (42) மாதன் (41), திருப்பதி (38) பண்ணீர் (47) மாதன் (45) ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சிலரை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மகேந்திர மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகேரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story